ஆயுதபூஜை, தசரா பண்டிகை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடிகளில் தக்காளியின் விலை இன்று ஒரே நாளில் 17 ரூபாய் உயர்ந்துள்ளது.
இரண்டு நாட்களாக குறைந்து கொண்டு வந்த தக்காளி விலை நேற்று கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்தது.
இதனை தொடர்ந்து இன்றும் கிலோவுக்கு 17 ரூபாய் வரை தக்காளி விலை அதிகரித்துள்ளது.
நேற்று 23 ரூபாய் வரை விற்ற நாட்டுத்தக்காளி இன்று கிலோவுக்கு 38 ரூபாய் வரை விற்கிறது.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தசரா பண்டிகை, நிறைவுபெறும் வரை இந்த விலை ஏற்றம் நீடிக்கும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.