12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் செலுத்த அவகாசம் வழங்க ரிசர்வ் வங்கியை வலியுறுத்த 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் மக்களிடையே கொரோனா தொடர்பான பயமும் அதிகரித்து வருகிறது. பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகளை வழங்கி பொருளாதாரத்தையும் மேம்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த கடிதத்தில், ” சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க கூறி ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரை நாம் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ரூ.5 கோடி வரை நிலுவை தொகை கடன் வைத்துள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட கால அவகாசம் வழங்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த விஷயத்திலும் நாம் சிறு, குறு நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே