ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு – வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள், பானுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ப.சிதம்பரம் சாட்சியத்தை அழிக்க வாய்ப்பு இல்லை என்ற டெல்லி உயர்நீதிமன்ற கருத்தையும், வயதையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார்.

இதனையடுத்து ஜாமீன் மனு மீது சிபிஐ வரும் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,

விசாரணையை வரும் 15 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே