சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

தமிழகத்தில், இன்று (செப்.,21), பெட்ரோல் லிட்டருக்கு 84.21 ரூபாய், டீசல் லிட்டருக்கு 76.85 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத் துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.21 ரூபாய், டீசல் லிட்டர் 76.99 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று டீசல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து, 76.85 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே