வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு..!

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அண்மையில், வெங்காய உற்பத்தி குறைந்து, விலை கடுமையாக உயர்ந்ததால், வெங்காய ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதித்திருந்தது.

தற்போது நிலைமை சீரடைந்து, வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து விட்டதால், டெல்லியில் கூடிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் சுற்றறிக்கை வெளியிட்டதும் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே