சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து..!!

ரயில் நிலையத்தின் வாசலிலேயே கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்ரபரம் ரயில் நிலையத்திற்குச் சென்ற கல்லூரி மாணவி ஸ்வேதா என்பவரை இளைஞர் ஒருவர் பட்டப்பகலிலேயே கத்தியால் குத்தியுள்ளார்.

கல்லூரி மாணவியை தாக்கியதோடு தன்னுடைய கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி சுவேதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

காதல் விவகாரத்தில் இளைஞர் அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்தினாரா என்பது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்வாதி என்ற இளம்பெண்ணை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே