திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 67ஆவது பிறந்தநாளாகும்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், தன்னுடைய பிறந்தநாளுக்கு கட்சி தொண்டர்கள் யாரும் நேரில் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் என்று ஸ்டாலின் கேட்டு கொண்டிருந்தார்.
இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.