ரஜினி உடன் கமல் கூட்டணி சேர்ந்தாலும், அதிமுகவின் வாக்கு வங்கியில் பாதிப்பும் ஏற்படாது : ஜெயக்குமார்

நடிகர் ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்ந்தாலும், அதிமுகவின் வாக்கு வங்கியில் பாதிப்பும் ஏற்படாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழ்மொழி வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பார்மலின் தடவப்பட்ட மீன்களை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக யாரும் பீதியைக் பரப்ப வேண்டாம் என்றார். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்பது தேமுதிகவின் உரிமையாக இருந்தாலும், அது தொடர்பாக கட்சி மேலிடம் முடிவெடுக்கும் எனக்கூறிய அவர்,  ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுகவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே