புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான 2020ஆம் ஆண்டிற்கான வரைவை கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று வெளியிட்டது மத்திய அரசு.

இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பது சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு(Environment IMpact Assessment). புதிய தொழிற்சாலை , நிறுவனம், சுரங்கம் என எதுவாக இருந்தாலும் சரி, அது வரவுள்ள பகுதியிலும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும்,அந்த மாற்றங்களினால் மக்கள் சந்திக்கும் சாதகம் , பாதகம் என்னென்ன என்பதை இந்த வரைவு சட்டம் மூலம் அறிய முடியும்.
புதிய தொழிற்சாலைகளால் ஒரு நாட்டின் வளம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு வரையறுக்கிறது.
தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான புதிய வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம் குறித்து மக்கள் கருத்துக்கான கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது நிபுணர் குழுவின் ஆய்வும் இன்றி அனுமதி வழங்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் மக்கள் கருத்துக்கான காலம் முடிவடையும் பட்சத்தில், இந்த சட்ட வரைவில் மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த புதிய வரைவு அமலுக்கு வரும்.
மத்திய அரசின் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020ஆம் ஆண்டு வரைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதாக தற்போது தமிழ்நாட்டில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சனம் எழுந்துவருகிறது.
மேலும் இந்த சட்ட வரைவானது நமது சுற்றுச்சூழலுக்கு மனிதர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என #TNRejectsEIA2020, #ScrapEIA ஆகிய ஹாஸ்டாக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இதற்கு அரசியல் தலைவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
Related Tags :
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.