நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு #CommonDP வெளியிடப்பட்டது!

ஜூன் 22ஆம் தேதி என்றால் தமிழ்நாடு கொண்டாட்டமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். அன்றுதான் தளபதி விஜய் பிறந்தநாள்.

ஆனால் இந்த வருடம் கொரானா பாதிப்பால் விஜய் சில விஷயங்களை செய்ய வேண்டாம் என தனது நற்பணி மன்றம் சார்பாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நிலவி வரும் பிரச்சனை காரணமாக பல்வேறு விதமான கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு விஜய் தெரிவித்துள்ளார்.

அதிலும் முக்கியமாக பேனர் வைப்பது, பால் அபிஷேகம் பண்ணுவது போன்ற விஷயங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபகாலமாக திரைப்பட வெளியீடு மட்டுமல்லாமல் நடிகர்களின் பிறந்த நாளன்றும் அவர்களது கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் நடைமுறை வழக்கத்துக்கு வந்துள்ளது. இதை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது.

தேவையில்லாமல் அந்த மாதிரி பணத்தை செலவு செய்ய வேண்டாம் எனவும் அந்த பணத்தை கொண்டு ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் போன்றோர்க்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக தான் அனைத்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அனேகமாக கொரோனா காரணமாக அதற்கு வாய்ப்பில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சமீபத்தில் ரசிகர் மன்றத்தின் வாயிலாக கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ள விஜய்யின் நற்பணிகளை பலரும் பாராட்டினர்.

பல்வேறு அதேபோல் அவரது ரசிகர்களும் இந்த பிறந்த நாளில் பல்வேறு உதவிகளை செய்வார்கள் எனவும் தெரிகிறது.

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் #THALAPATHYBdayFestCDP என்ற அக்கௌண்ட் உருவாக்கியுள்ளனர்.

மேலும் இன்று பொதுவான டிபி வெளியிடப்பட்டுள்ளது . இந்த டிபி அதிக அளவில் பரிமாறப்பட்டும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது .

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே