வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கும், அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதி!

வனிதா பெயர் எப்பவுமே ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைத்தாண்டி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது வனிதாவின் திருமணம்.

அவரது சொந்த வாழ்க்கையில் விமர்சனம் செய்து வனிதாவிடம் பல பிரபலங்கள் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.

அதில் சூர்யதேவி ரொம்பவே வனிதாவை வசைபாடினார். இதனையடுத்து வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சூர்யாதேவியை கைது செய்தனர் காவல்துறையினர்.

ஜாமீனில் வெளியே வந்த சூர்யாதேவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்த இன்ஸ்பெக்டருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

வனிதா விவகாரத்தில் முதலில் சிக்கியவர் சூர்யாதேவி. இவர் சாலிகிராமம் தசரதபுரம் சண்முக சுந்தரம் தெருவில் வசித்து வருகிறார்.

27 வயதாகும் சூர்யாதேவி, வனிதாவின் திருமணத்திற்கு எதிராக வாய்க்கு வந்தபடி திட்டியதோடு அதனை யுடுயூப்பில் போட்டிருந்தார். இந்த வீடியோக்கள் எல்லாமே வைரலானது.

இதைப்பார்த்து கடுப்பான வனிதா முதலில் போரூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சூர்யாதேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் திட்டினார் வனிதா.

இந்த சர்ச்சை சில நாட்கள் நீடித்தது. இதனையடுத்து வனிதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சூர்யாதேவி. இந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இருவரும் மாறி மாறி புகார் கொடுக்க எல்லா புகார்களும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

வடபழனி காவல்நிலையத்தில் வனிதாவையும், சூர்யாதேவியையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டது. ஆனாலும் யாரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. உடனே கோபத்தோடு கிளம்பிப்போனார் வனிதா.

அவதூறாக வீடியோ வெளியிட்டதாக வனிதா கொடுத்த புகாரின் பேரில் சூர்யாதேவியை வடபழனி மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

தற்போது கைது செய்யப்படும் அனைவருமே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சூர்யா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பாக விதிமுறை அடிப்படையில் கொரோனா பரிசோதனைக்காக ஆய்வாளர் ஜோதி அழைத்துச் சென்றுள்ளார்.

சூர்யா தேவிக்கு பரிசோதனை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், தனக்கும் ஆய்வாளர் சோதனை செய்து கொண்டார்.

தற்போது சோதனை முடிவில் பெண் ஆய்வாளர் ஜோதி மற்றும் சூர்யாதேவி ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. கைதான சூர்யாதேவி ஜாமீனில் வெளிவந்த பின்னர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

கொரோனா பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யா தேவி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.

மாநகராட்சி அதிகாரிகள் சூர்யாதேவியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லை என்று தெரியவந்துள்ளது.

சூர்யாதேவி கைது செய்யப்பட்டபோது நடிகை வனிதா உடன் பல காவல்துறையினர் காவல் நிலையத்தில் உடன் இருந்துள்ளனர்.

இதனையடுத்து நடிகை வனிதா மற்றும் கைது நடவடிக்கையின் போது உடன் இருந்த மற்ற காவலர்களுக்கும் கொரோனா சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

வனிதாவை வசைபாடிய சூர்யாதேவி தற்போது எல்லோருக்கும் கொரோனாவை பரப்பி விட்டு விட்டு எங்கேயே எஸ்கேப் ஆகிவிட்டார்.

இனி அவர் எத்தனை பேருக்கு கொரோனா பரப்பி விடப்போகிறாரோ தெரியலையே.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே