யேசுதாஸ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் ட்வீட்..!

பிரபல பாடகர் யேசுதாசின் 80 ஆவது பிறந்த நாளை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரை இசையில் கொடி கட்டிப்பறக்கும் யேசுதாஸ், தமிழ், மலையாளம், இந்தி மற்றும் வெளிநாட்டு மொழிகள் என 80 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.

இன்று 80 ஆவது பிறந்த நாள் காணும் அவருக்கு உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் கலாச்சார வளத்திற்கு யேசுதாஸ் மதிப்பிடமுடியாத பங்களிப்பை நடத்தி உள்ளதாக பாராட்டி இருக்கிறார்.

அனைத்து வயது ரசிகர்களின் மத்தியிலும் யேசுதாசின் இனிமையான பாடல்கள் பிரபலமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ள மோடி, யேசுதாஸ் நீண்ட நாட்கள் வாழ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே