இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம் என்று பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் பா.ம.க. எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
ஆனால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கை நாடும் சேர்க்கப்பட வேண்டும் என்றும்; தமிழகத்தில் முகாம்களில் உள்ள 2 லட்சம் இலங்கைத் தமிழர்கள் எதிர்காலம் இல்லாமல் உள்ளார்கள், அவர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டத் திருத்தத்தை கொண்டு வர வலியுறுத்துவோம் என்றார்.