இ-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் – பீலா ராஜேஷ்

இ-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பு அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் தனியாக ஒரு ஐ.ஏ.ஸ் அதிகாரியை முதல்வர் நியமித்தார்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியாக முன்னாள் சுகாதார துறை செயலாளரும் தற்போதைய வணிகவரித் துறை செயலாளருமான பீலா ராஜேஷை நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த டாக்டர் பீலா ராஜேஷ் பர்கூர் பகுதியில் உள்ள மகளிர் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வெளியூரில் இருந்து வருபவர்களை தனிமை படுத்தும் மையத்தை ஆய்வு செய்தார். 

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து 32 பேர் வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தமிழகத்தில் மொத்தம் 86,235 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1133 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பர்கூரில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் கட்டுபடுத்தப்பட்ட உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனை அடுத்து இ-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்காணிக்கப்படுவதாக சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே