நூற்றாண்டில் கால்பதிக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம்

மக்களுக்கான போராட்ட களத்தில் நூற்றாண்டில் கால் பதிக்கிறது கம்யூனிஸ்ட் இயக்கம்.

1920 ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாகிய கம்யூனிஸ்ட் இயக்கம், சுதந்திர போராட்டம் தொடங்கி விவசாயிகள், தொழிலாளர்கள் என எண்ணற்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண போராடி இருக்கிறது.

கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா என 3 மாநிலங்களில் ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் தற்போது கேரளாவில் மட்டுமே அரியணையில் நீடிக்கிறது.

தேசிய அளவில் இடதுசாரி கட்சிகளின் 2004 ஆம் ஆண்டு 59 மக்களவை உறுப்பினர்கள் இருந்த நிலையில் அந்த எண்ணிக்கையும் தற்போது 5 ஆக குறைந்துள்ளது.

தேர்தல் தோல்விகள் ஆழமாக பரிசீலிக்க வேண்டிய நேரத்தில், கம்யூனிஸ்டின் அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்ல கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர்.

இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும் அது சாத்தியம் ஆகுமா என்று பரிசீலிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அதேபோல யாரை முதன்மையாக எதிர்க்க வேண்டும் என்பதில் அழுத்தமான முடிவை தலைமை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தன்னெழுச்சியாக போராடும் மக்களை ஒருங்கிணைக்க தனி வியூகம் தேவை என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

தங்களின் போராட்ட வரலாறு தான் தமிழகத்தின் நிலச் சீர்திருத்தச் சட்டம், குடியுரிமை மனைச்சட்டம் கொண்டுவர உறுதுணையாக இருந்தது என்கின்றனர் கம்யூனிஸ்டுகள்.

தொழிலாளர்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் NLC, BHEL உள்ளிட்ட நிறுவனங்கள் உருவாக துணை நின்றோம் என்றும் நினைவு கூறுகின்றனர்.

மக்களின் பிரச்சினைகளை முழுவதுமாக தீர்க்க கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும் என்று அவர்கள் கூறினாலும் பயணிக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் உள்ளது.

தேசிய அளவிலான தேர்தலை எதிர்கொள்ளும் போது இடதுசாரி கட்சிகள் தேர்தல் அதன் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே