மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன் ஜாமீன் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 40 பேரின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பல உத்தரவுகளை பிறப்பித்தாலும் மணல் கடத்தல் முன் ஜாமீன் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மணல் கடத்தலால் தான் நிலத்தடி நீர் ஆதாரம், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன என்று நீதிபதி தெரிவித்தார்.
முன்ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையாலேயே தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வருத்தம் தெரிவித்துள்ளார்.