எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல் இந்தாண்டு தமிழக பட்ஜெட் இருக்கும் – துணை முதல்வர் ஓபிஎஸ்

நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட், மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் உள்துறை சார்பில் நடைபெற்ற 12வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை அடையாறில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய ரிசர்வ் படையின் டி.ஜி.பி. சோனல் மிஸ்ரா கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற பழங்குடியின மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சரிடம், தர்ம யுத்தம் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் நோக்கம் நிறைவேறியதா என்று கேள்வி எழுப்பட்டது.

அதற்கு வார்த்தைகளின்றி மவுனத்தை பதிலாக அளித்துவிட்டு விலகி சென்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே