தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவு செய்ய வேட்பாளருக்கு அனுமதி

சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். 

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறும்போது, “ தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கு ரூ.22 லட்சமும், தமிழகம் உள்பட மற்ற 4 மாநிலங்களில் ஒரு தொகுதிக்கு வேட்பாளர் ரூ 30.8  லட்சம் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே