நடிகர் சேதுராமனின் திடீர் மரணத்திற்கு இதுதான் காரணம்!… வதந்திக்கு முற்றுப்புள்ளி.!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்தவர் நடிகர் சேதுராமன். இவர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது, இவர் திடீரென நேற்று இரவு 8.45 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். டாக்டர் சேதுராமனின் வயது 37.

இந்த இளம் வயதில் மாரடைப்பால் இறந்துள்ள சம்பவம் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் சோகத்துடன் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மருத்துவரும் அவரது நண்பருமான அஷ்வின் விஜய், அவர் இல்லாமல் என் வாழ்க்கை நார்மலாக இருக்க போவதில்லை . அவர் மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்தார்.கொரோனாவால் இறக்கவில்லை. தயவு செய்து இந்த நேரத்தில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே