கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பரிந்துரைத்துள்ளது தேசிய பணிக்குழு.

உலகம் முழுவதும் 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.3 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே