இந்த 17 ஸ்மார்ட்போன்களையும் இப்போ வாங்கினா தான் உண்டு; இல்லனா.!?

கடந்த சில மாதங்களில் பல ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வைக் கண்டன, சில ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பும் கிடைத்துள்ளது. இந்த இரண்டுமே பல ஸ்மார்ட்போன்கள் பிராண்டுகளின் மிகவும் புதிய மற்றும் சற்று பழைய மாடல்களில் நிகழ்ந்துள்ளன.
அப்படியாக சமீபத்தில் இன்னும் மலிவானதாக மாறிய மற்றும் சற்று விலை அதிகரிப்பை பெற்ற ஸ்மார்ட்போன்களின் முழு லிஸ்ட் இங்கே உள்ளது. நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டிமிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பட்டியல் உங்களுக்கு நிச்சயமாக உதவும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கு இருந்தால் கட்டுரையை படித்து விட்டு சொல்லுங்கள்!
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்: ரூ.7,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று, இப்போது ரூ.1,08,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ: ரூ.7,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று, இப்போது ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒப்போ ரெனோ 3 ப்ரோ: ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று இப்போது ரூ.29,990 க்கு வாங்க கிடைக்கிறது.

விவோ எஸ் 1 ப்ரோ: ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று இப்போது ரூ.19,990 க்கு வாங்க கிடைக்கிறது
ஐக்யூ 3: ரூ.4,000 வரை குறைந்தது; இப்போது ரூ.34,990 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ்: ரூ .6,000 வரை குறைந்தது; இப்போது ரூ.18,599 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி 6: ரூ .1,000 என்கிற விலை உயர்வை பெற்று இப்போது ரூ.14,000 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி 5ஐ: ரூ.1,000 என்கிற விலை உயர்வை பெற்று இப்போது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி நர்சோ 10 ஏ: ரூ.500 என்கிற விலை உயர்வை பெற்று இப்போது ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி சி 3: ரூ.1,000 அதிகரித்துள்ளது; இப்போது ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

போக்கோ எக்ஸ் 2 (8 ஜிபி + 256 ஜிபி): ரூ.5,00 என்கிற விலை உயர்வை பெற்று இப்போது ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி எம் 21: ரூ.500 அதிகரித்துள்ளது; இப்போது ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்: ரூ.500 அதிகரித்துள்ளது; இப்போது ரூ .16,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது.

சியோமி ரெட்மி 8ஏ டூயல் (3 ஜிபி ரேம்): ரூ.300 என்கிற விலை உயர்வை பெற்று இப்போது ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கிறது.

சியோமி ரெட்மி 8: ரூ.300 அதிகரித்துள்ளது; இப்போது ரூ.9,799 க்கு வாங்க கிடைக்கிறது.
சியோமி ரெட்மி நோட் 8: ரூ.500 என்கிற விலை உயர்வை பெற்று இப்போது ரூ 11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

அசுஸ் ராக் போன் II (8 ஜிபி + 128 ஜிபி): ரூ.2,000 அதிகரித்துள்ளது; இப்போது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே