“அரியர் தேர்வை ரத்து செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை” – உயர்கல்வித்துறை

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

கொரோனா அச்சுறுத்தலால் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட போது, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்றது.

மாணவர்களின் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரியர் தேர்ச்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, பல்கலைக்கழக அரியர் தேர்வில் ஆல்பாஸ் என்னும் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை.

யுஜிசி விதிமுறைகளை மீறி விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது.

மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவில் எந்த விதிமீறலும் இல்லை என உயர்கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே