ரஜினி இலங்கை வர எந்த தடையும் இல்லை : நமல் ராஜபக்சே

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை என அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன், சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்தார்.

அப்போது அவர் இலங்கைக்கு வருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது இலங்கையில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நமல் ராகபக்சே, நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை என்றும்; இதுகுறித்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தானும், தனது தந்தையும் ரஜினி-யின் பெரும் ரசிகர்கள் என தெரிவித்துள்ள நமல், ரஜினிகாந்த் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம் எனவும், அதற்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே