சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் நீரை, தேநீரில் கலந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், சம்பந்தப்பட்ட கடையை மூட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 7வது நடைமேடையில் சிற்றுண்டி கடை உள்ளது.
இக்கடையில் பணியாற்றும் ஊழியர் ரயில்வே கழிவறைக்கு பயன்படுத்தும் தண்ணீரை, தேநீர் குடுவையில் ஊற்றும் காட்சிகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடைக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடையை மூட உத்தரவிட்டுள்ளது.
மேலும் மற்ற கடைகளும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதா என விசாரணையையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும் தரமான தண்ணீரையே தேநீர் மற்றும் உணவகங்களில் பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.