தமிழகம் முழுவதும் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் க. சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மீன்வளத் துறையின் மேலாண்மை இயக்குநராக இருந்த சமீரனை ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பொறுப்பு) இயக்குநராக இருந்த விஷ்ணு நெல்லை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர் கே. செந்தில் ராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே. ஜெயகாந்தன் மீன் வளர்ச்சி கழக இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த வீர ராகவ ராவ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எஸ். கந்தசாமி, இ-சேவைகளின் குறைதீர் அமைப்பின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெஸிந்தா லஸாரஸ், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்கநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ். திவ்யதர்ஷினி சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே