தமிழகத்தில் நாளைமுதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறக்கும் நேரத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடைகள் திறந்து வைத்திருக்கும் நேரத்தை நாளை முதல் இரவு 10 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை முதல் காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே