தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் எனப்படுவோர் பட்டியல் சமூகத்தின் பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு சமூகம் ஆகும். 

தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள், பட்டியல் சமூத்தவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு உரிமைகளைப் பெற்று வருகின்றனர்.

இந்த சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரின் கீழ் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவேந்திர குலத்தான், பள்ளர், காலாடி, பண்ணாடி, குடும்பன், கடையன் ஆகிய 6 சாதிப் பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்னும் பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

குடியரசு தலைவரின் ஒப்புதலின் பேரில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே