தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற தெப்ப திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் வள்ளி தெய்வானையுடன் முருகன் எழுந்தருளி நிகழ்வு நடைபெற்றது.
தெப்பக்குளத்தில் மிதந்தபடி தேர் வலம் வந்தபோது அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.
இரவு பத்து முப்பது மணிக்கு மேல் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் கொடி இறக்கப்பட்டு தைப்பூச திருவிழா நிறைவுக்கு வந்தது.