ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதுமே ஆட்டு இறைச்சியின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று ஒரு கிலோ ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுகின்றது.
எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகள் அன்று இறைச்சி சாப்பிட்டே தீரவேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
இந்நிலையில், ஆட்டு இறைச்சிகள் விலை அதிகரித்தாலும் ஒரு கிலோ வாங்க கூடிய இடத்தில் அரைகிலோவாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்பதற்காக இறைச்சி வாங்குவதற்காக மக்கள் ஆட்டு இறைச்சி கடைகளில் கூட்டமாக கூடி இருக்கின்றனர்.
மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மாநகராட்சியின் இறைச்சிக் கூடங்களில் இருந்து வரும் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
அனைத்து கடைகளும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இந்த விதிகளை மீறும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும்.
அவை மூன்று மாதங்களுக்கு திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று சென்னை மாநகராட்சி நேற்று அறிவித்தது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.