தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் நாட்டில் உள்ள சிறந்த காவல் நிலையங்களில் 4-ம் இடம்

தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம், நாட்டில் உள்ள சிறந்த காவல் நிலையங்களில் 4-ம் இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை, 2004-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஒரு ஆய்வாளர், 3 சார்பு ஆய்வாளர்கள் உள்பட 28 காவலர்கள், இந்த காவல்நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், காவலர்கள் கனிவாக நடந்துகொள்வதாகவும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் 4-ம் இடத்திலும், தமிழக காவல் நிலையங்களில் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே