தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் 33 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

தொடர்ந்து 7வது நாளாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

அதன்படி நேற்று 4,072 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 28 ரூபாய் உயர்ந்து 4,100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நேற்று 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 224 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து, 52 ரூபாய் 90 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 500 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கொரானா அச்சுறுத்தலால் பங்குச்சந்தைகளில் சரிவுடன் வர்த்தகம் நடைபெறும் நிலையில், தங்கத்தில் முதலீடுகள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே