சொத்து மதிப்பை அறிவித்தார் பிரதமர் மோடி..!! நிர்மலாவிடம் இருப்பது ஒரு ஸ்கூட்டர் தானாம்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த வருடத்தைவிட இந்த வருடம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களது சொத்து மதிப்பு விவரங்களை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், பிரதமர் உள்ளிட்டோரின் சொத்து விவரங்கள் தெரிய வந்துள்ளன.

அதன்படி, பிரதமர் மோடிக்கு 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் நிலவரப்படி ரூ.2.85 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.2.49 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சுமார் ரூ.36 லட்சம் உயர்ந்துள்ளது.

இதற்கு அவர் வங்கியில் செய்த முதலீடுகள் தான் காரணம் என்றும், அதன் மூலம் அவருக்கு நல்ல வருவாய் உயர்வு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேசிய சிறுசேமிப்புத்திட்டம், இன்சூரன்ஸ் பாலிசிகள், வரி சேமிப்பு, இன்பிரா பாண்டுகளில் அவரது முதலீடுகள் உள்ளன.

கையிருப்பு தொகையாக ரூ.31 ஆயிரத்து 450 வைத்துள்ளார். மேலும், அவரிடம் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.1.5 லட்சம் என கூறப்படுகிறது.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் ஜாயின்ட் ஒனர் என்ற பெயரில் 3531 சதுர அடியில் ஒரு பிளாட் உள்ளது.

அதே வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.28.63 கோடியாகும். கடந்த வருடம் இது ரூ.32.3 கோடியாக இருந்தது. குஜராத் மாநிலத்தில் அவருக்கு 10 வீடுகள் உள்ளன.

மொத்த கையிருப்பு ரூ.15.814 மட்டுமே. அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைந்து போனதற்கு பங்கு சந்தை சூழல்களே காரணம் என கூறப்படுகிறது.

அதே போல, நிதியமைச்சர் சீத்தாராமனுக்கு அதிகப்படியான சொத்துக்கள் ஏதும் இல்லையாம்.

மிக குறைந்த அளவே சொத்துக்கள் உள்ளதாம். குறிப்பாக, சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம். வெறும் ஒரு ஸ்கூட்டர் மட்டுமே உள்ளதாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே