பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி, சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி சரிவுடன் நிறைவடைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியபோது மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கி மேலாளர்கள் உடன் இன்று நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து சந்தையில் இறங்குமுகம் ஏற்பட்டது.

வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 81 புள்ளிகள் சரிவுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 12 புள்ளிகள் சரிவுடனும் நிலை கொண்டது.

வங்கித் துறை சார்ந்த பங்குகள் விலை குறைந்த நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் அடைந்தனர்.

வர்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்ததால் 10 லட்சம் கோடி டாலர் சந்தை மூலதனத்தை கடந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 18 காசுகள் குறைந்து 75 ருபாய் 73 காசுகளாக இருந்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே