தமிழகம் முழுவதும் மஹாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய வழிபாடு நடைபெற்றது.
அதே போல, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 26 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் லெபனான் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சியும், பிரபல பாடகர் அந்தோணி தாசன் பாடலும், ‘கபீா் கஃபே’ குழுவினர் உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்களுடன் உற்சாகமாக நடைபெற்றது.
இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.பி. ரவீந்திரநாத், நடிகை காஜல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் எம்.பி.ரவீந்திரநாத் ஜக்கி வாசுதேவின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
அந்த புகைப்படம் இணைய தளத்தில் பரவி வருகிறது.