21 குண்டுகள் முழங்க, இராணுவ மரியாதையுடன் ராணுவ வீரர் மதியழகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது

ராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சித்தூர் ஊராட்சி, வெற்றிலைக்காரன்காடு, பகுதியைச் சோந்த பெத்தா கவுண்டர்- ராமாயி தம்பதியின் மூத்த மகன் மதியழகன்(40).

இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல், இந்திய எல்லைப் பாதுகாப்பு படையில் முதல் நிலை ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தனது சொந்த ஊருக்கு வந்திருந்த மதியழகனுக்கு, காஷ்மீர் மாநிலம் ரஜோரிப்பகுதியில் எல்லைக் கண்காணிப்பு பணியில் பணி ஒத்துக்கீடு செய்து, உத்தரவு வந்த நிலையில் அவர் உடனடியாக அப்பகுதிக்கு சென்று, ராணுவப் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய திடீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் ராணுவவீரர் மதியழகன்.

இதையடுத்து அவரது உடல் தலைநகர் தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு இன்று கொண்டுவரப்பட்டது.

பின்னர் அவரது சொந்த ஊரான, சித்தூர், வெற்றிலைக்காரன்காடு பகுதியில் உள்ள மதியழகன் இல்லத்தில், வைக்கப்பட்டு இறுதி மரியாதை செய்தபின், ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே