சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 10வது மண்டலமாக இருக்கும் கோடம்பாக்கத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்து கருஞ்சிவப்பு மண்டலத்துக்கு மாறியுள்ளது.
கோடம்பாக்கத்தில் மட்டும் நேற்று புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக சென்னையில் 3,043 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
இதில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 399 போ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே ராயபுரம், திருவிகநகர் பகுதிகள் அதிக நோயாளிகளைக் கொண்ட மண்டலங்களாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் அதிக நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா நோயாளிகள் குறைவாக இருக்கும் மண்டலமாக மணலியும், ஆலந்தூரும் உள்ளது.
இங்கு தலா 19 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராயபுரத்தில் 490 நோயாளிகளும், திருவிக நகரில் 477 நோயாளிகளும் தேனாம்பேட்டையில் 343 நோயாளிகளும், அண்ணாநகரில் 233, வளசரவாக்கத்தில் 256 நோயாளிகளும் உள்ளனர்.
அம்பத்தூரில் 164 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.