சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் லேட்டஸ்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கிறது பல முக்கிய பிரபலங்களையும் இந்த வைரஸ் தாக்கி உள்ளது. அந்த வகையில் தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த வாரம் அவர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார்.
அதில் கொரோனா தொற்று உறுதியாக சென்னையில் சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந் நிலையில் நேற்று உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் பெற்று வருகிறார் என்றும் மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.