டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் , உரிய சமூக இடைவெளி கடைபிடித்தே மதுபானம் விற்கப்படுகிறது. மதுவாங்க வருவோர் சமூக இடைவெளியை கடை பிடிப்பதை காவல் துறை கண்காணிக்கிறது.
டாஸ்மாக் கடைகளை திறப்பது அரசின் கொள்கை முடிவு நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.