என்னைப் பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதியும், தராதரமும் கிடையாது என அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
சென்னை க்ரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுகவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தலாம் என தெளிவாக தீர்ப்பை வழங்கியுள்ளது.
தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் திமுக தலைவர் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தேர்தலை நிறுத்த வேண்டும் சீர்குலைக்கும் வகையில் திமுக தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தி வருகிறது என்று கூறினார்.
மேலும், திமுக தலைவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய சி.வி.சண்முகம், முதல்வர் கனவில் உள்ள ஸ்டாலின் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் என்னை பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதியும், தராதரமும் கிடையாது என்று கூறிய சி.வி,சண்முகம்;
அவர் ஒன்றும் காந்தியும் இல்லை; நான் புத்தனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.