சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் : மு.க.ஸ்டாலின்

நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் போராட்டத்திற்கு அதிமுக கூடுதல் விளம்பரம் செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

மக்கள் பேராதரவு என்கிற கோடாரியை பயன்படுத்தாமல் தேர்தல் சமயங்களில் திமுக நீதிமன்றத்தை நாடுவதாக முதலமைச்சர் தெரிவித்த கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்க முதலமைச்சர்களிடம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாடம் கற்றுகொள்ள வேண்டுமென குறிப்பிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே