செய்தியாளர், ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6-ல் தடுப்பூசி முகாம் – தமிழக அரசு அறிவிப்பு..!!

செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் 6-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி முகாம் 6-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரோன பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.அத்துடன் பொதுமக்கள் தங்களை கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில் முதல்கட்டமாக இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த தடுப்பு முகாமில் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் தவறாமல் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே