மு.க.ஸ்டாலினை பதற வைத்த ஒரே ஒரு ஹேஷ்டேக்… #தத்திஸ்டாலின்

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் போராட்டத்தை தவிர்க்குமாறு தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ’’மிசா அமலுக்கு இருந்த காலகட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஆனால், அடி வாங்கியதை அழுத்தமாக அவர் பதிவு செய்து வருகிறார். ஆனால், எதற்காக அடித்தார்கள்? ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்ததற்காக அடித்தார்கள் என்று கூறுவது தவறு. அவருடைய தவறான செயல்களுக்காக குறிப்பாக, பாலியல் சார்ந்த பிரச்னைகளில் அவருடைய நிலைப்பாட்டுக்காக அடித்திருக்கலாம் என்று அனைவரும் சொல்கிறார்கள்’’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

அமைச்சர் பாண்டியராஜனின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து அவதூறு கருத்துக்களை அமைச்சர் பாண்டிராஜன் பேசியதாக கூறி சென்னை அண்ணா நகரில் திமுகவினர் பாண்டியராஜனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், அமைச்சர் பாண்டியராஜனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று திமுக தொண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை திமுக தொண்டர்கள் தவிர்த்து விட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டதாகவும், நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்க மாட்டோம்; அவை எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பதறியடித்து இப்படி போராட்டத்தை நிறுத்தச் சொன்னதற்கு காரணம், மாஃபா பாண்டியராஜுக்கு ஆதரவாகவும், மு.க.ஸ்டாலினை எதிர்த்தும் #தத்திஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி விட்டனர்.

இதனால் பதறிப்போன ஸ்டாலின் வாழ்க வசவாளர் எனக் கூறி போராட்டத்தை நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார் எனக் கூறுகிறார்கள். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே