தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியீடு

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய படம் தர்பார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகியிருக்கிறது.

தமிழில் முன்னனி நடிகர் கமல்ஹாசன், தெலுங்கில் மகேஷ்பாபு, மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து வெளியிட்டிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்து இருப்பதாலும், ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு காவல்துறை அதிகாரியாக நடித்து இருப்பதாலும் இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு மிகப்பெரிய வரவேற்பு உருவாக்கி இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை கொஞ்சமும் சிதைக்காமல், இன்னும் சொல்லப்போனால் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த மோஷன் போஸ்டர் ஆனது தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் ரஜினிக்கு தமிழகம் தாண்டி இந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கின்றது. 

அதை குறிவைத்து இந்த படம் ஒரே நாளில் ஜனவரி 10ஆம் தேதி இந்த நான்கு மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே