இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71,75,881 ஆக உயர்வு..!!

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 55,342 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 71,75,881 ஆக உயர்ந்தது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் மீண்டவர்களின் புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் புதிதாக 55,342 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 706 பேர் பலியாகியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 71,75,881 ஆக உயர்ந்துள்ளது.

மகிழ்ச்சி தரும் வகையில், கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 

நேற்று நாட்டில் கரோனா பாதிப்பு 70 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 8,38,729 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரோனா பாதித்தவர்களில் இதுவரை 62 லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,09,856 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில் கரோனா தொற்று நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரு பக்கம் உயர்ந்தும், மறுபக்கம் குறைந்தும் காணப்படுகிறது.

உதாரணமாக தில்லி, புணே, தாணே நகரங்களில் கரோனா பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா நகரங்களில் தொடர்ந்து கரோனா தொற்று உயர்ந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே