சென்னை அணியின் கேப்டன் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டில் மஞ்சள் பெய்ன்ட் அடித்து தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

13 சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணி சற்று தடுமாறி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

பல போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தும் சிஎஸ்கே தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

IPL2020: CSK fan renovate his house with MS Dhoni photo

இனி விளையாட உள்ள 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது.

கடந்த 2010 ஐபிஎல் சீசனிலும் சென்னை அணியின் முதல் பாதி இவ்வாறே இருந்தது.

ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சென்று கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி.

இந்த வருட ஐபிஎல் தொடரில் அதேபோல் மேஜிக் நிகழுமா? என ரசிகர்கள் காத்துள்ளனர்.

IPL2020: CSK fan renovate his house with MS Dhoni photo

இந்தநிலையில் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டில் தோனி புகைப்படங்களை வரைந்து வைத்துள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.

கடலூர் மாவட்டம் அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். சிறுவயதிலேயே படிப்பை பாதியிலியே நிறுத்திய கோபி கிருஷ்ணன் குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார்.

தோனி தீவிர ரசிகரான இவர், துபாயில் தோனி கிரிக்கெட் விளையாட வரும்போது அவரை சந்திக்க முயன்று பார்த்தும் உள்ளார்.

IPL2020: CSK fan renovate his house with MS Dhoni photo

இந்த நிலையில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் கோபி கிருஷ்ணன், தனது சொந்த வீடு முழுவதும் மஞ்சள் பெய்ன்ட் அடித்து, தோனியின் புகைப்படங்களை வரைந்து வந்துள்ளார்.

மேலும் ‘தோனி ரசிகனின் வீடு’ என்றும் எழுதியுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே