இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது!

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 63ஆயிரத்தை தாண்டியது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 78,761 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,42733 ஆக உயர்ந்தது.
* புதிதாக 948 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,498 ஆக உயர்ந்தது.
* கொரோனாவால் பலியானோர் விகிதம் – 1.81%
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 64,935 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 27,13,933 ஆக உயர்ந்துள்ளது.
* கொரோனா தொற்றில் இருந்து மீண்டோர் விகிதம் – 76.47%
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,65,302 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்களின் விகிதம் – 21.72%

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :1,83,539 ; குணமடைந்தோர் : 554777; இறப்பு : 24,106

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :52,726; குணமடைந்தோர் :3,55,434; இறப்பு :7152

டெல்லி : சிகிச்சை பெறுவோர் :13,892 ; குணமடைந்தோர் : 152919; இறப்பு : 4409

கேரளா : சிகிச்சை பெறுவோர் :23615 ; குணமடைந்தோர் :47945; இறப்பு : 281

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :87,726 ; குணமடைந்தோர் :2,34,482; இறப்பு : 5504

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :98,173 ; குணமடைந்தோர் : 3,12,174; இறப்பு : 3795

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே