எம்பி வசந்தகுமாரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக வசந்தகுமார் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான வசந்த குமார் நேற்று முதல்நாள் மாலை கொரோனா காரணமாக உயிரிழந்தார்.

கடந்த 10ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் வசந்த குமார் அனுமதிக்கப்படடார்.

நுரையீரலில் தொற்று அதிகம் ஏற்பட்டு, உடல் நலிவடைந்து, சிகிக்ச்சை பலனின்றி வசந்த குமார் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இவருக்கு இறப்புக்கு பின்னர் கொரோனா நெகட்டிவ் என்று வந்த காரணத்தால் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. 

இதையடுத்து சென்னை தி நகரில் மக்கள் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பொதுமக்கள் பலர் திரண்டு வந்து வசந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி உட்பட அரசியல் தலைவர்கள் பலர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பின் காமராஜர் அரங்கில் இவரின் உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இவரின் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து வசந்த குமார் உடல் இன்று அவரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இன்று வசந்த குமார் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.

நேற்று இரவில் இவரின் உடல் அகஸ்தீஸ்வரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

இங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள், சொந்த ஊரை சேர்ந்த உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே