கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி..??

ஒடிஷா, சத்தீஸ்கர் மாநிலங்களில் பழங்குடிகள் உணவாக சாப்பிடும் சிவப்பு எறும்பு சட்னி கொரோனாவை குணப்படுத்துமா? என்பது குறித்து 3 மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஒடிஷா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒடிஷா, சத்தீஸ்கர் மாநிலங்களில் திராவிட மொழி பேசும் பழங்குடிகள் இன்னமும் ஆதி பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மலைகளில் வாழும் இம்மக்களின் பேச்சு மொழிகளில் பெருமளவு தமிழ் கலந்து இருக்கும். சில ஊர் பெயர் இடங்களும் கூட தூய தமிழில் இருக்கும்.

இப்பழங்குடி மக்களிடம் மரங்களில் இருக்கும் சிவப்பு எறும்பு சட்னி ஒருவகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

சிவப்பு எறும்புகளை பச்சை மிளகாயுடன் அரைத்து இந்த சட்னி செய்கின்றனர். இது சளி, காய்ச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பல நோய்களை குணமடைய செய்கிறது என்பது இந்த மக்களின் நம்பிக்கை.

இந்த சிவப்பு எறும்பு சட்னி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; பல தாதுக்கள் இதில் உள்ளன.

ஆகையால் கொரோனாவை குணப்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என கூறி பரிபடாவை சேர்ந்த பொறியாளர் நயாதார், பொதுநலன் மனுவை ஒடிஷா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது மத்திய ஆயுஷ் அமைச்சகம், மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை 3 மாதங்களில் பதிலளிக்க வேண்டும் என்று ஒடிஷா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே