இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,08,254 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,509 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 857 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,795 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 12,82,215 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தற்போது வரை கொரோனவால் பாதித்த 5,86,244 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18,55,745 ஆக இருந்தது.
மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 38,938 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,30,509 ஆகவும் இருந்தது. நேற்று வரை நாடு முழுவதும் நேற்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,86,298 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.