அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா… டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி..!!

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் பிரதமர் மோடி இருந்து புறப்பட்டார்.

அயோத்தி ராமஜென்மபூமியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்காக வரும் பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டுகிறார்

ராவணனை வீழ்த்தி விட்டு அயோத்தி திரும்பும் ராமபிரான் அந்த இடத்தை அனுமனுக்கு கொடுத்தார். அதனால் அந்த இடம் அனுமன்ஹார்கி என அழைக்கப்படுகிறது.

ராமர் கோவில் பூமி பூஜைக்கான சடங்குகள் ராமஜென்மபூமியில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கின. தொடர்ந்து நடந்து வரும் இந்த சடங்குகளின் நிறைவாக இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 9.35 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து லக்னோ கிளம்பியுள்ளார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கிளம்பும் அவர் 11.30 மணியளவில் அங்குள்ள சாகேத் கல்லூரி மைதானத்தில் இறங்குகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே